மிளகாய் வணிக வளாகத்தில் சப்-கலெக்டர் ஆய்வு


மிளகாய் வணிக வளாகத்தில் சப்-கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 12 Jun 2023 12:15 AM IST (Updated: 12 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மிளகாய் வணிக வளாகத்தில் சப்-கலெக்டர் ஆய்வு செய்தார்.

ராமநாதபுரம்

வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையின்கீழ் செயல்படும் ராமநாதபுரம் விற்பனைக்குழுவின் சார்பில் எட்டிவயல் கிராமத்தில் உள்ள ஒருங்கிணைந்த மிளகாய் வணிக வளாகம் மற்றும் பரமக்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை ராமநாதபுரம் பயிற்சி சப்-கலெக்டர் நாராயண சர்மா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். எட்டிவயல் ஒருங்கிணைந்த மிளகாய் வணிக வளாகத்தில் உள்ள 2 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிட்டங்கியில் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் குழுவினர் மற்றும் வியாபாரிகளால் இருப்பு வைக்கப்பட்டுள்ள வேளாண் விளைபொருட்களான மிளகாய் வத்தல், புளி, மல்லி, தட்டைப்பயறு மற்றும் பேரிச்சம்பழம், 2 ஆயிரம் டன் சேமிப்பு கிட்டங்கி மற்றும் 65 வணிக கடைகளையும் பார்வையிட்டார். திங்கள், வியாழக்கிழமைகளில் எட்டிவயல் ஒருங்கிணைந்த மிளகாய் வணிக வளாகத்தில் நடைபெறும் மறைமுக ஏலத்தில் விவசாயிகள் கலந்துகொள்வதோடு, தங்களது விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்காதபட்சத்தில் மேற்கண்ட கிட்டங்கியில் குறைந்த வாடகைக்கு இருப்பு வைத்து கூடுதல் விலை கிடைக்கும்போது நல்ல விலைக்கு விற்று அதிக லாபம் பெறலாம் எனசப்-கலெக்டர் தெரிவித்தார். மேலும் பரமக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள திட்டம் செயல்பாடுகள் மற்றும் முகவை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மதிப்பு கூட்டும் மையத்தை பார்வையிட்டார். ஆய்வின்போது ராமநாதபுரம் விற்பனைக்குழு செயலாளர் ராஜா, கண்காணிப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.


Next Story