சார் பதிவாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்


சார் பதிவாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
x

சார் பதிவாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

திருப்பூர்

பல்லடம்,

பல்லடத்தில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் பல்லடம், பொங்கலூர் மற்றும் சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியங்களூக்கு உட்பட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களின் பத்திரப்பதிவுகள் நடைபெற்று வருகிறது. பல்லடம் சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடுகள் நடப்பதாகவும், புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் கடந்த 12-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை வேலை நிறுத்தம் செய்வதாக பல்லடம் பத்திர எழுத்தர்கள், வழக்கறிஞர்கள் ஆவணம் தயாரிப்பாளர்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் அறிவித்து இருந்தனர்.

இதற்கிடையே பல்லடம் சார் பதிவாளராக பணியாற்றிய பிரவீனா மற்றும் ஈஸ்வரி ஆகியோர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். திருப்பூர் வழிகாட்டி சார் பதிவாளராக பணியாற்றிய பெருமாள் ராஜா, சூலூர் சார் பதிவாளராக பணியாற்றிய பூபதி ராஜ் ஆகியோர் பல்லடம் சார்பதிவாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சார் பதிவாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் வேலை நிறுத்த போராட்டத்தை திரும்பப் பெறுவதாக பல்லடம் பத்திர எழுத்தர்கள், வழக்கறிஞர்கள் ஆவணம் தயாரிப்பாளர்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் அறிவித்து உள்ளனர்.

-------


Next Story