மானிய முறைகேடு வழக்கு நிலுவை; ஓய்வு பெறும் நாளில் வேளாண் இணை இயக்குனர் பணிநீக்கம்


மானிய முறைகேடு வழக்கு நிலுவை; ஓய்வு பெறும் நாளில் வேளாண் இணை இயக்குனர் பணிநீக்கம்
x

வேளாண் மானிய முறைகேடு வழக்கு நிலுவையில் உள்ளதால், ஓய்வு பெறும் நாளில் வேளாண் இணை இயக்குனர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

வேலூர்,

கடந்த 2013 ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மானியத்தில் முறைகேடு செய்ததாக வேலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் மகேந்திர பிரதாப் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும் கோர்ட்டில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், மகேந்திர பிரதாப் நேற்று ஓய்வு பெற இருந்தார். இருப்பினும் அவர் மீதான வழக்கு நிலுவையில் உள்ளதால், அவருக்கு ஓய்வு வழங்க மறுத்து பணிநீக்கம் செய்து வேளாண் துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

1 More update

Next Story