சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் புறநகர் மின்சார ரெயில் சேவை பாதிப்பு
சென்னை – கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் புறநகர் மின்சார ரெயில் சேவையில் உயர்மின் அழுத்த கோளாறு காரணமாக பாதிப்பு ஏற்பட்டது.
சென்னை,
சென்னை – கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் புறநகர் மின்சார ரெயில் சேவை உயர்மின் அழுத்த கோளாறு காரணமாக பாதிப்படைந்துள்ளது. ஆத்திரமடைந்த பயணிகள் பொன்னேரி ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எண்ணூர் ரெயில் நிலையத்தில் புறநகர் ரெயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், எண்ணூர் ரெயில் நிலையத்தில் ஒன்றன் பின் ஒன்றாக 5 க்கும்ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது. ரெயில் சேவை பாதிப்பால், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
Related Tags :
Next Story