சிகிச்சை பெற்று வரும் காதலன் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல்


சிகிச்சை பெற்று வரும் காதலன்  தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல்
x

திருப்பூரில் ஆஸ்பத்திரியில் இளம்பெண்ணை கத்தியால் குத்திக்கொலை செய்த காதலன் சிகிச்சை பெற்று வரும்நிலையிலும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார்.

திருப்பூர்

திருப்பூரில் ஆஸ்பத்திரியில் இளம்பெண்ணை கத்தியால் குத்திக்கொலை செய்த காதலன் சிகிச்சை பெற்று வரும்நிலையிலும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார்.

இளம் பெண் கொலை

திருப்பூர் அவினாசியைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவரது மகள் சத்தியஸ்ரீ (வயது 21) திருப்பூர் குமார்நகர் 60 அடி ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார். கடந்த 1-ந்தேதி காலை சத்தியஸ்ரீ ஆஸ்பத்திரியில் பணியில் இருந்தபோது அங்கு வந்த காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த நரேந்திரன் (21) என்ற வாலிபர் திடீரென சத்தியஸ்ரீயை கத்தியால் குத்தியதுடன், கழுத்தையும் அறுத்தார். மேலும் அந்த வாலிபர் கத்தியால் தனது கழுத்தையும் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதில் சத்தியஸ்ரீ பரிதாபமாக இறந்தார். நரேந்திரன் படுகாயத்துடன் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நரேந்திரனுக்கும், சத்தியஸ்ரீக்கும் முகநூல் மூலமாக காதல் ஏற்பட்டது தெரிய வந்தது. நரேந்திரன் கோவை சரவணம்பட்டியில் தங்கியிருந்து கேட்டரிங் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நரேந்திரனுக்கும், சத்தியஸ்ரீக்கும் தகராறு ஏற்பட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

தீவிர சிகிச்ைச

இதனிடையே கழுத்துப் பகுதியில் கத்தியால் அறுத்துக்கொண்டதால் நரேந்திரனுக்கு பல தையல்கள் போடப்பட்டுள்ளது. இதனால் அவரால் சரியாக பேசமுடியவில்லை.

மேலும் போலீசார் அவரிடம் விசாரணை நடத்த முயன்றபோது, தற்கொலை செய்து கொள்வேன் என்று அவர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறாராம்.

இந்த நிலையில் காதலியை கொலை செய்துவிட்டு, தற்கொலைக்கு முயற்சித்த நரேந்திரனை பார்க்க அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் யாரும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் சத்தியஸ்ரீயை காதலித்து வந்தது பெற்றோருக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. போலீசாரின் தீவிர கண்காணிப்பில் நரேந்திரன் தொடர்ந்து தனியாகவே சிகிச்சை பெற்று வருகிறார்.

சந்தேகம்

நரேந்திரன், சத்தியஸ்ரீக்கு கூகுள் பே மூலமாக அனுப்பிய பணத்தை, அதே மருத்துவமனையில் பணிபுரியும் மற்றொரு நபருக்கு சத்தியஸ்ரீ அனுப்பியதாகவும், அதை நரேந்திரன் தெரிந்து கொண்டு சத்தியஸ்ரீயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

எனினும் அவரை கைது செய்து, முறையாக வாக்குமூலம் பெற்றால் மட்டுமே சத்தியஸ்ரீ கொலைக்கான முழுக்காரணமும் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story