காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை


காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை
x

காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம்,

திருச்சி மணப்பாறை பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் நல்லுச்சாமி (வயது27). இவர் ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.இவர் ஆர்.எஸ்.மங்கலம் செட்டியமடை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக தங்கி வந்தார். இந்தநிலையில் ஒரு பெண்ணுடன் பழகி காதலித்து வந்தநிலையில் அந்த பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப் பட்டது. இதையடுத்து மனம் உடைந்த நல்லுச்சாமி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகிறார்.


Next Story