நர்சிங் மாணவி தற்கொலை


நர்சிங் மாணவி தற்கொலை
x

நர்சிங் மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை படவெட்டி வலசை பகுதியை சேர்ந்தவர் வடிவேலு. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரின் மகள் ஹரிணி(வயது16). ராமநாதபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நர்சிங் படித்து வந்தார். இவர் நீண்ட நேரம் செல்போனில் மூழ்கி இருந்தாராம். இதனை அவரின் தாய் முருகேஸ்வரி கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த ஹரிணி விஷம் குடித்துள்ளார். இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தாய் முருகேஸ்வரி அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story