ஓசூரில், வெவ்வேறு இடங்களில்பெயிண்டர் உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை


ஓசூரில், வெவ்வேறு இடங்களில்பெயிண்டர் உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை
x
கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் பகுதியில் வெவ்வேறு இடங்களில் பெயிண்டர் உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

பெயிண்டர்

ஓசூர் அருகே குமுதேப்பள்ளியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 29). பெயிண்டர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வீட்டில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்றும் மனைவியுடன் தகராறு ஏற்பட்டதில், மாதேஷ் வேதனை அடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கூலித்தொழிலாளி

இதேபோல் ஓசூர் அருகே பேகேப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் மல்லிகார்ஜூனன் (40). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வீட்டில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்றும் மனைவியுடன் தகராறு ஏற்பட்டதில் மல்லிகார்ஜூனன் வேதனை அடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story