அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களுக்கு திடீர் தடை


அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களுக்கு திடீர் தடை
x

செங்கோட்டை வழியாக கேரளாவுக்கு அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களுக்கு போலீசார் திடீர் தடை விதித்தனர்.

தென்காசி

செங்கோட்டை:

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான கனரக வாகனங்களில் கேரளாவிற்கு கனிம வளங்களானது எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது. இதையொட்டி அளவுக்கு அதிகமாக பாரங்களை ஏற்றிச் செல்வதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இதனை தொடர்ந்து, போலீசார் தங்களது சோதனையை தீவிரப்படுத்தி அதிக பாரங்களை ஏற்றி செல்லும் லாரிகளை பிடித்து அபராதம் விதித்து வந்தனர். மேலும் இந்த லாரிகளால் அதிகப்படியான விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் பாதிப்பு ஏற்படுவதாக தொடர் புகார்கள் எழுந்தது. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் கனிமவள லாரிகள் அனைத்தையும் மறித்து 10 டயர்களுக்கு கீழ் உள்ள லாரிகளை மட்டுமே போலீசார் கேரளாவிற்கு அனுமதித்து வருகின்றனர்.

அதேபோல் 10 டயர்களுக்கு மேல் உள்ள லாரிகள் அனைத்தும் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது.

1 More update

Next Story