பள்ளியில் கணினி வெடித்து திடீர் தீ விபத்து.. அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்


பள்ளியில் கணினி வெடித்து திடீர் தீ விபத்து.. அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்
x

மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் தேளூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் 127 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் கணினி ஆய்வகத்தில் கணினி வெடித்து திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட கரும்புகை மூட்டத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டதில் பாதிக்கப்பட்ட 23 மாணவ மாணவிகள் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட மாணவர்களை அமைச்சர் சிவசங்கர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார்.

1 More update

Next Story