பாடாலூர் யூனியன் வங்கியில் திடீர் தீ
பாடாலூர் யூனியன் வங்கியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் கிராமத்தில் யூனியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று வங்கியில் இருந்து கரும்புகை வெளியே வந்தது. இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர். வங்கி மேலாளர் உடனே வந்து வங்கியை திறந்து பார்த்தபோது 4 குளிர்சாதன எந்திரங்கள் தீப்பிடித்து மளமளவென எரிந்தது. உடனே இதுகுறித்து வங்கி மேலாளர் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த பெரம்பலூர் தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்தனர். இதில் முக்கிய ஆவணம் எதுவும் எரியவில்லை. இதுபற்றி பாடாலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story