நிலக்கரி ஏற்றி வந்த லாரியில் திடீர் தீ
விக்கிரவாண்டியில் நிலக்கரி ஏற்றி வந்த லாரியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
விழுப்புரம்
விக்கிரவாண்டி:
சென்னை துறைமுகத்தில் இருந்து அரியலுார் சிமெண்டு நிறுவனத்திறகு 35 டன் நிலக்கரி ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டது. லாரியை கும்பகோணத்தை சேர்ந்த டிரைவர் ஹரி(வயது 32) என்பவர் ஓட்டினார். விக்கிரவாண்டி சுங்கசாவடியை கடக்க முயன்ற போது லாரியின் அடிப்பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனே டிரைவர், லாரியை சாலையோரமாக நிறுத்தினார். இது பற்றி தகவல் அறிந்ததும் விக்கிரவாண்டி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Related Tags :
Next Story