குடிசை வீட்டில் திடீர் தீ; பொருட்கள் எரிந்து நாசம்


குடிசை வீட்டில் திடீர் தீ; பொருட்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 18 Jun 2023 6:45 PM GMT (Updated: 19 Jun 2023 9:17 AM GMT)

கயத்தாறு அருகே குடிசை வீட்டில் திடீரென தீப்பிடித்தது. இதில் அங்கிருந்த பொருட்கள் எரிந்து நாசமானது.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு அருகே அகிலாண்டபுரம் பஞ்சாயத்து சத்திரப்பட்டியை சேர்ந்தவர் மோசஸ் (வயது 74). ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். இவர் தற்போது புதிய வீடு கட்டி வருகிறார். அதற்கு தேவையான மரத்திலாலான நிலை, ஜன்னல் மற்றும் கதவு, 3 புதிய மின் மோட்டார்கள் ஆகியவற்றை அருகில் உள்ள தகரம் மற்றும் ஓலைகளால் வேய்ந்த குடிசை வீட்டில் வைத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக கழுகுமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் நிலைய அலுவலர் லிங்கதுரை தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வந்து போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் தீயணைப்பு வாகனம் வருவதற்குள் காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென பற்றி எரிந்தது. இதில் குடிசையில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாயின. இந்த தீ விபத்து குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த தீ விபத்து மின் கசிவினால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தூத்துக்குடி மாவட்ட தடயவியல் அலுவலர்கள் வந்து ஆய்வு செய்தனர். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவித்தனர்.


Next Story