ஆத்தூர் அருகே குடிசை, கொட்டகையில் திடீர் தீ மாடு தீயில் கருகி சாவு


ஆத்தூர் அருகே  குடிசை, கொட்டகையில் திடீர் தீ  மாடு தீயில் கருகி சாவு
x

ஆத்தூர் அருகே குடிசை, கொட்டகையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் மாடு தீயில் கருகி செத்தது.

சேலம்

ஆத்தூர்,

ஆத்தூர் அருகே உள்ள காட்டுக்கோட்டை கல்லாங்காடு பகுதியை சேர்ந்தவர் முத்துவேல் (வயது 51), விவசாயி. இவர் தனது விவசாய நிலத்தில் குடிசையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென குடிசையில் தீப்பற்றி எரிந்து அருகில் உள்ள மாட்டுக்கொட்டகைக்கும் பரவியது.

இது குறித்து தகவல் கிடைத்ததும், ஆத்தூர் தீயணைப்பு படையினர் நிலைய அலுவலர் சேகர் தலைமையில் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் ஒரு பசு மாடு சிக்கி உயிரிழந்தது. தீ விபத்து குறித்து ஆத்தூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Related Tags :
Next Story