குப்பை கிடங்கில் திடீர் தீ
குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
கரூர்
புகழூர் டி.என்.பி.எல். சிமெண்டு ஆலை அருகே உள்ள மூலிமங்கலம் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் புகழூர் நகராட்சியின் வார்டு பகுதிகளில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை கொட்டி வைத்திருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென அந்த குப்பையில் தீப்பிடித்து எரிந்தது. இதைக்கண்ட அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை முற்றிலும் அணைத்தனர்.
Related Tags :
Next Story