மின்கசிவால் குளிர்சாதன பெட்டியில் திடீர் தீ


மின்கசிவால் குளிர்சாதன பெட்டியில் திடீர் தீ
x

மின்கசிவால் குளிர்சாதன பெட்டியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

கரூர்

கரூர் திருமாநிலையூரை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் நேற்று மாலை தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார். இந்தநிலையில் வீட்டின் உள்பகுதியில் கரும்புகை வந்துள்ளது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் கரூர் தீயணைப்பு நிலையத்திற்கும், ஈஸ்வரனுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படைவீரர்கள் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டினுள் இருந்த குளிர்சாதனை பெட்டியில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது தெியவந்தது. இதையடுத்து அங்கு எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். வீட்டில் யாரும் இல்லாததால் ெபரும் விபத்து தவிா்க்கப்பட்டது.


Related Tags :
Next Story