திருக்குறுங்குடி மலையில் திடீர் தீ


திருக்குறுங்குடி மலையில் திடீர் தீ
x

திருக்குறுங்குடி மலையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

திருநெல்வேலி

ஏர்வாடி:

திருக்குறுங்குடி பகுதியில் நேற்று மாலையில் பலத்த இடி மின்னலுடன் லேசான மழை பெய்தது. அப்போது அங்குள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் மலையடிபுதூர் பீட் மாவடி மொட்டை பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் காட்டுத்தீ மளமளவென்று பரவியது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருக்குறுங்குடி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், இந்த தீவிபத்தில் சுக்குநாரி புற்கள், மூலிகை செடிகள், மரங்கள் கருகின. மின்னல் தாக்கியதில் வனப்பகுதியில் தீப்பிடித்து எரிந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story