துழுவன் சாளை மீனுக்கு திடீர் மவுசு


துழுவன் சாளை மீனுக்கு திடீர் மவுசு
x
தினத்தந்தி 19 Sep 2023 6:45 PM GMT (Updated: 19 Sep 2023 6:47 PM GMT)

குளச்சலில் துழுவன் சாளை மீனுக்கு திடீர் மவுசு ஏற்பட்டது.

கன்னியாகுமரி

குளச்சல்:

குளச்சலில் துழுவன் சாளை மீனுக்கு திடீர் மவுசு ஏற்பட்டது.

குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்கள், கட்டுமரங்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று காலையில் கடலுக்கு மீன் பிடிக்க சென்று கரை திரும்பிய பைபர் வள்ளங்களில் அதிக அளவில் துழுவன் சாளை மீன்கள் கிடைத்தன. வழக்கமான பிற மீன்களின் வரத்து குறைந்ததால் இந்த துழுவன் சாளைக்கு திடீர் மவுசு ஏற்பட்டது. இதனால் மீன் பிரியர்கள் போட்டிப்போட்டு ஏலம் கேட்டு வாங்கி சென்றனர். அதன்படி 20 கிலோ எடை கொண்ட ஒரு கூடை துழுவன் சாளை மீன்கள் ரூ.1,400 வரை விற்பனையானது. வழக்கமாக துழுவன் சாளை மீன்கள் விலை குறைவாகத்தான் போகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story