தனியார் பாரை மூட வலியுறுத்தி பொதுமக்கள் திடீர் போராட்டம்
விருத்தாசலத்தில் தனியார் பாரை மூட வலியுறுத்தி பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்
விருத்தாசலம்,
விருத்தாசலம் முல்லா தோட்டம் பகுதியில் தனியார் டாஸ்மாக் பார் ஒன்று உள்ளது. இந்த பாருக்கு மது அருந்த வரும் மேட்டு காலனியைச் சேர்ந்த இளைஞர்களுக்கும், முல்லா தோட்டம் பகுதியை சோ்ந்த இளைஞர்களுக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த பாரை மூட வலியுறுத்தி நேற்று இரவு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து விருத்தாசலம் சப்-கலெக்டரிடம் முறையாக மனு கொடுங்கள் என அறிவுறுத்தினர். இதையேற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story