கடலூரில் திடீர் மழை


கடலூரில் திடீர் மழை
x

கடலூரில் திடீா் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கடலூர்

தமிழக பகுதிகளில் மேற்கு திசை காற்று வேக மாறுபாடு நிலவுவதால், தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதையொட்டி கடலூரில் காலை முதல் மாலை வரை வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் மாலை 5.30 மணி அளவில் வானில் கருமேகங்கள் திரண்டு குளிர்ந்த காற்று வீச தொடங்கியது.

இதற்கிடையே 6.30 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக பெய்தது. இந்த மழை சுமார் மணி நேரம் நீடித்தது. அதன் பிறகு மழை தூறிக் கொண்டே இருந்தது. திடீரென பெய்த இந்த மழையால் வெப்பம் தணிந்து பூமி குளிர்ந்ததால் பகலில் வெயிலால் அவதியடைந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

1 More update

Next Story