சென்னையில் பல்வேறு பகுதிகளில் திடீர் மழை


சென்னையில் பல்வேறு பகுதிகளில் திடீர் மழை
x
தினத்தந்தி 5 Jun 2023 3:53 PM IST (Updated: 5 Jun 2023 4:14 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் பல்வேறு பகுதிகளில் திடீர் மழை பெய்து வருகிறது.

சென்னை,

சென்னையில் கடந்த 5 நாட்களாக 100 டிகிரி தாண்டி வெயில் கொளுத்திய நிலையில் மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் திடீர் மழை பெய்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டு தாங்கல், சைதாப்பேட்டை, வடபழனி, அசோக்நகர், கோடம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னையின் புறநகர் பகுதிகளான வண்டலூர், பெருங்களத்தூர், மண்ணிவாக்கம், முடிச்சூர்,உள்ளிட்ட பகுதிகளில் திடீர் கன மழை பெய்து வருகிறது. காலையில் இருந்தே வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலையில் திடீரென பெய்த மழையால் ஜில்லென நகரமாக சென்னை மாறியது.

1 More update

Next Story