பலத்த காற்றுடன் திடீர் மழை


பலத்த காற்றுடன் திடீர் மழை
x
தினத்தந்தி 9 July 2023 10:19 PM IST (Updated: 9 July 2023 10:19 PM IST)
t-max-icont-min-icon

ரிஷிவந்தியம், சங்கராபுரம் பகுதியில் பலத்த காற்றுடன் திடீர் மழை

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம், சங்கராபுரம் பகுதியில்

பலத்த காற்றுடன் திடீர் மழை

ரிஷிவந்தியம், ஜூலை.9-

ரிஷிவந்தியம் பகுதியில் நேற்று காலையில் வெயில் சுட்டெரித்தது. வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததை உணர முடிந்தது. இதனால் புழுக்கம் ஏற்பட்டு உடலில் வியர்வை நீர் வடிந்து தாகத்தை வருத்தியது. இதனால் பழச்சாறு, குளிர்பானங்கள், நீர், மோர், கரும்பு சாறு ஆகியற்றை பருகியும், வெள்ளரிப்பிஞ்சு, நுங்கு ஆகியவற்றை சாப்பிட்டும் பொதுமக்கள் தாகத்தை தணித்து கொண்டனர்.

இந்த நிலையில் மாலையில் வாகனத்தில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டன. அடுத்த சில நிமிடங்களில் பலத்த காற்றுடன் திடீரென மழை பெய்ய தொடங்கியது. முதலில் லேசான தூறலுடன் பெய்ய தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக பொழிந்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதியில் குளம்போல் தேங்கி நின்றது. இந்த மழை ரிஷிவந்தியம் மட்டுமின்றி அத்தியூர், அரியலூர், வாணாபுரம், பெரியபகண்டை மரூர், கடம்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் பெய்தது. ஆடிப்பட்ட விதைப்புக்கு இந்த மழை பேருதவியாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். முன்கூட்டியே ஆடிப்பட்ட விதைப்பு குறித்து வேளாண்மைதுறை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றனர்.

அதேபோல் சங்கராபுரத்திலும் நேற்று காலை முதல் மாலை வரை மிதமான வெயில் அடித்தது. பின்னர் மாலையில் பலத்த மழை பெய்தது. இதனால் பூமி குளிர்ந்து வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Related Tags :
Next Story