பா.ஜ.க.வினர் திடீர் சாலை மறியல்
கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி மறுப்பு பா.ஜ.க.வினர் திடீர் சாலை மறியல்
சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே உள்ள ச.செல்லம்பட்டு கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகே பா.ஜ.க. கொடிக்கம்பம் ஏற்கனவே இருந்ததாகவும் அதை அகற்றிவிட்டு புதிய கொடிக்கம்பம் அமைக்கும் பணியில் பா.ஜ.க.வினர் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ் வருவாய்துறை அனுமதி பெற்று கொடிக்கம்பம் நடுமாறு கூறியதாக தெரிகிறது. ஏற்கனவே கொடிக்கம்பம் இருந்த இடத்தில் கம்பம் நடுவதற்கு வருவாய் துறையினர் அனுமதி பெறவேண்டும் என்று கூறியதை கண்டித்து பா.ஜ.க. மாவட்ட தலைவர் அருள் தலைமையில், ஒன்றிய தலைவர்கள் ராமச்சந்திரன், வேல்முருகன், பொதுச்செயலாளர் ராஜேஷ் மற்றும் நிர்வாகிகள் ச.செல்லம்பட்டு பஸ் நிறுத்தம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன், மண்டல துணை தாசில்தார் மனோஜ்முனியன் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கொடிக்கம்பம் நடுவது குறித்து சமாதான கூட்டம் நடத்தி முடிவு செய்யலாம் என்று கூறியதை அடுத்து பா.ஜ.க.வினர் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக ச.செல்லம்பட்டு- சின்னசேலம் சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.