ஏர்டெல் செல்போன் சேவை திடீர் முடக்கம்


ஏர்டெல் செல்போன் சேவை திடீர் முடக்கம்
x

நாடு முழுவதும ஏர்டெல் சேவையில் பாதிப்பு ஏற்பட்டதால் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதி அடைந்தனர்.

சென்னை,

நாட்டின் முன்னணி தொலை தொடர்பு நிறுவனமான பாரத் ஏர்டெல் சேவை திடீரென முடங்கி உள்ளது. ஏர்டெல் வாடிக்கையாளர்கள் சிக்னல் கிடைக்காமல் டேட்டா, கால் அழைப்பு உள்ளிட்ட எந்த சேவையும் பெற முடியாமல் உள்ளனர். ஏர்டெல் சேவையில் ஏதேனும் தொழில்நுட்ப கோளாறா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இது தொடர்பாக ஏர்டெல் தரப்பில் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை.

ஏர்டெல் சிக்னல் கிடைப்பதில் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து வாடிக்கையாளர்கள் பலர் இணையத்தில் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் ஏர்டெல் சேவை பாதிப்பு ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே சரிசெய்ய்பட்டது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமம் தற்போது சரிசெய்யப்பட்டு தடையின்றி சேவையை பெற்று வருகின்றனர்.

சென்னையின் பல்வேறு இடங்களில் ஏர்டெல் செல்போன் சேவை முடங்கியதாக வாடிக்கையாளர்கள் அவதி அடைந்தனர். கடந்த 30 நிமிடங்களுக்கு மேலாக ஏர்டெல் செல்போன் சேவை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


Next Story