ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலம் அருகே திடீர் போக்குவரத்து மாற்றம்
ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலம் அருகே திடீர் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
திருச்சி
ஜங்ஷன் ரெயில் மேம்பாலம் கட்டும் பணி ரூ.81 கோடி செலவில் கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கியது. இதில் மன்னார்புரம் பகுதியில் இணைக்கும் வகையிலான ஒரு பகுதிக்கு மட்டும் ராணுவத்துக்கு சொந்தமான இடத்தை பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ஒரு பகுதியில் மட்டும் பாலம் கட்டுமான பணிகள் நிறைவு பெறாமல் இருந்தது. பல வருட போராட்டத்துக்கு பிறகு ராணுவ அமைச்சம் இடம் வழங்கியதை தொடர்ந்து பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் நேற்று சர்வீஸ் ரோட்டில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றதால் ஜங்ஷனில் இருந்து மன்னார்புரம் நோக்கி சென்ற வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. அந்த வாகனங்கள் கல்லுக்குழி வழியாக சுற்றி சென்று மன்னார்புரத்தை அடைந்து செல்லும் வகையில் அங்கு சாலையின் இருபுறமும் இரும்பு தடுப்புகள் வைத்து வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.
Related Tags :
Next Story