மனைவி- மகன் சாவில் திடீர் திருப்பம்:தற்கொலைக்கு தூண்டியதாக கட்டிட தொழிலாளி கைது
புஞ்சைபுளியம்பட்டியில் மனைவி, மகன் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக தற்கொலைக்கு தூண்டியதாக கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டியில் மனைவி, மகன் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக தற்கொலைக்கு தூண்டியதாக கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கட்டிட தொழிலாளி
புஞ்சைபுளியம்பட்டி நேரு நகர் ரேஷன் கடை வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 31). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி சரிதா (29). இவர்களுடைய மகன் பவன் கிருத்திக் (3). செல்வராஜுக்கும், சரிதாவுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இதனிடையே கடந்த சில மாதங்களாக கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
கைது
இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி வீட்டில் ஒரே சேலையில் சரிதா, அவருடைய மகன் பவன் கிருத்திக் ஆகியோர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இதுகுறித்து சரிதாவின் தாயார் ஜெயா, புஞ்சைபுளியம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மனைவி மற்றும் மகனை தற்ெகாலைக்கு தூண்டியதாக செல்வராஜை கைது செய்தனர்.