தலைமை கழகத்துக்கு திடீர் வருகை- அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் சீரமைப்புப் பணிகளை அ.தி.மு.க.இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.
சென்னை
கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற கலவரத்தால் அ.தி.மு.க. அலுவலகம் சேதம் அடைந்தது. சேதமான அலுவலகத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சீரமைப்புப் பணிகளை அ.தி.மு.க.வின் நிர்வாகிகளும் ஆய்வு செய்தனர். ஓ.பன்னீர்செல்வம் ஆட்களால் சேதப்படுத்தப்பட்ட கதவுகள் மாற்றப்பட்டுள்ளது.
கதவுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, சில கதவுகளின் சாவிகளையும் பன்னீர்செல்வம் ஆட்கள் எடுத்துச்சென்றதால் பூட்டுகள் அனைத்தும் புதிதாக மாற்றப்பட்டுள்ளது. 8 கதவுகள் சீரமைக்கப்பட்டுள்ளது.
கணினிகளை ஓ.பன்னீர் செல்வம் எடுத்துச் சென்றதால், அதற்கு மாற்றாக புதிய கணினிகள் வாங்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தின் வெளிப்புறத்தில் உடைக்கப்பட்ட கண்ணாடிகள் மாற்றப்பட்டன.
ஓரிரு நாட்களில் சீரமைப்புப் பணிகள் நிறைவு பெற உள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.