பெரும்பாறை அருகே மலைப்பாதையில் தோன்றிய திடீர் அருவிகள்


பெரும்பாறை அருகே மலைப்பாதையில் தோன்றிய திடீர் அருவிகள்
x
தினத்தந்தி 20 Oct 2023 9:30 PM GMT (Updated: 20 Oct 2023 9:30 PM GMT)

பெரும்பாறை அருகே மலைப்பாதையில் திடீரென்று அருவிகள் தோன்றின.

திண்டுக்கல்

கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பெரும்பாறை, கொங்கப்பட்டி, சோலைக்காடு, நேர்மலை, மஞ்சள்பரப்பு, தடியன்குடிசை, குப்பம்மாள்பட்டி, கல்லக்கிணறு, ஆடலூர், பன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் மலைப்பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சில இடங்களில் ஊற்று தண்ணீர் சிறு அருவிகளாக கொட்டுகிறது.

குறிப்பாக மலைப்பாதையின் ஓரங்களில் பாறைகளின் இடுக்குகள் வழியாக தண்ணீர் வழிந்தோடி, திடீர் அருவிகளாக மாறியுள்ளன. இதனை அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பார்த்து ரசித்தபடி செல்கின்றனர். தொடர் மழையால் குடகனாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் புல்லாவெளி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.


Next Story