கழுத்தில் சுருக்கு கம்பியுடன் தவிக்கும் நீலகிரி லங்கூர் குரங்கு


கழுத்தில் சுருக்கு கம்பியுடன் தவிக்கும் நீலகிரி லங்கூர் குரங்கு
x
தினத்தந்தி 26 March 2023 6:45 PM (Updated: 26 March 2023 6:46 PM)
t-max-icont-min-icon

கழுத்தில் சுருக்கு கம்பியுடன் தவிக்கும் நீலகிரி லங்கூர் குரங்குக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

நீலகிரி

கூடலூர்,

முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதியான மசினகுடி பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இதேபோல் அரிய வகை நீலகிரி லங்கூர் குரங்கு உள்பட வன உயிரினங்களும் காணப்படுகின்றன. இந்தநிலையில் மசினகுடி பஜார் பகுதியில் கழுத்தில் சுருக்கு கம்பி இறுகிய நிலையில் நீலகிரி லங்கூர் குரங்கு தவித்த நிலையில் சுற்றி வருகிறது. அதன் கழுத்தில் காயங்களும் உள்ளது. இதனால் குரங்கின் உடல்நிலை மிகவும் மோசமாகி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் தரப்பில் கேட்டபோது, சுருக்கு கம்பியுடன் சுற்றித்திரியும் குரங்கை பிடித்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

1 More update

Next Story