தோகைமலை ஒன்றியக்குழு தலைவியாக சுகந்தி தேர்வு


தோகைமலை ஒன்றியக்குழு தலைவியாக சுகந்தி தேர்வு
x

தோகைமலை ஒன்றியக்குழு தலைவியாக சுகந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கரூர்

தமிழகம் முழுவதும் கடந்த 2020-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில், 15 உறுப்பினர்களை கொண்ட தோகைமலை ஒன்றியத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த 10 பேர், தி.மு.க.வை சேர்ந்த 4 பேர், பா.ஜ.க.வை சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்று கவுன்சிலர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து தோகைமலை ஒன்றியக்குழு தலைவராக கவுன்சிலர் லதா ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றது. இதையடுத்து அ.தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர்கள் 8 பேர் தி.மு.க.வில் இணைந்தனர். இதனால் தி.மு.க.வின் பலம் 12-ஆக உயர்ந்தது. இதையடுத்து பல்வேறு காரணங்களால் ஒன்றியக்குழு தலைவர் லதா ரங்கசாமி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனால் அவரது பதவி பறிபோனது.

இதையடுத்து நேற்று காலை தோகைமலை ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. ேதர்தல் அதிகாரியாக கரூர் மாவட்ட தணிக்கை உதவி இயக்குனர் இந்திராணி செயல்பட்டார். ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு கூடலூர் கவுன்சிலர் சுகந்தி சசிகுமார் வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் ேவட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் சுகந்தி சசிகுமார் தோகைமலை ஒன்றியக்குழு தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

அவருக்கு குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ராமர், தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story