ரேஷன் கடைகளுக்கு வந்த கரும்புக்கட்டுகள்
குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க ரேஷன் கடைகளுக்கு கரும்புக்கட்டுகள் வந்தன
பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்த ஆண்டும் அரிசி குடும்ப அட்டைதாரர்க ளுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு, ரூ.1000 ரொக்கம் மற்றும் வேட்டி-சேலை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இதையடுத்து பொங்கல் பரிசு தொகுப்புகளை அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பிவைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கோவை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு நாளை (திங்கட்கிழமை) முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட உள்ளது. முன்னதாக கோவை மாவட்டத்தில் 10 லட்சத்து 80 ஆயிரத்துக் கும் மேற்பட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பெற டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது.
இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, பொங்கல் பரிசு தொகுப் பில் வழங்கப்படும் கரும்பு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு கோவைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது.
அவை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. எனவே டோக்கன் பெற்றவர்கள் நாளை முதல் ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு பெற்றுக் கொள்ளலாம் என்றனர்.