திருத்தணியில் கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


திருத்தணியில் கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

திருத்தணியில் கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்

தஞ்சாவூா் மாவட்டம், திருமண்டங்குடியில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலை நிா்வாகத்தை கண்டித்து கரும்பு விவசாயிகள் நேற்று முன்தினம் தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றபோது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கரும்பு விவசாயிகளை தாக்கிய தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையை கண்டித்து திருத்தணியில் உள்ள தனியார் தியேட்டர் அருகே தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் பெருமாள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பினர். மேலும் திருமண்டங்குடியில் உள்ள தனியாா் சர்க்கரை ஆலை நிா்வாகத்தினா், விவசாயிகள் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் முழுவதையும் தீா்த்து, அப்பிரச்சினையிலிருந்து விவசாயிகளை விடுவிக்க வேண்டும். ஆலையை தனியாருக்கு தாரைவார்க்காமல் தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என விவசாயிகள் கோஷமிட்டனர்.


Next Story