திருமண்டங்குடி கரும்பு விவசாயிகள் சாலை மறியல்
நிலுவை தொகையை வழங்கக்கோரி திருமண்டங்குடி கரும்பு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50 பேரை ேபாலீசார் கைது செய்தனர்.
கபிஸ்தலம்:
நிலுவை தொகையை வழங்கக்கோரி திருமண்டங்குடி கரும்பு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50 பேரை ேபாலீசார் கைது செய்தனர்.
காத்திருப்பு போராட்டம்
கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி தனியார் சக்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கு தரவேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி 301-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் நேற்று தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். அதற்காக அவர்கள் நேற்று காலை திருமண்டங்குடியில் உள்ள காத்திருப்புப் போராட்ட இடத்தில் இருந்து புறப்பட்டபோது அவர்களை பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி மேற்பார்வையில், கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில் போலீசார், விவசாயிகளை தஞ்சைக்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.
சாலை மறியல்
இதனால் கரும்பு விவசாயிகள் போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் தஞ்சைக்கு செல்ல அனுமதி மறுக்கவே கரும்பு விவசாயிகள் கபிஸ்தலம் அருகே உள்ள அண்டங்குடியில் கும்பகோணம் - திருவையாறு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
இதனை தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்து உமையாள்புரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.