அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உற்பத்திதிறனை அதிகரிக்க வேண்டும்


அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உற்பத்திதிறனை அதிகரிக்க வேண்டும்
x

அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உற்பத்திதிறனை அதிகரிக்க வேண்டும்என்று மகேந்திரன் எம்.எல்.ஏ. கலெக்டரிடம் மனு அளித்தார்.

திருப்பூர்


அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உற்பத்திதிறனை அதிகரிக்க வேண்டும்என்று மகேந்திரன் எம்.எல்.ஏ. கலெக்டரிடம் மனு அளித்தார்.

மடத்துக்குளம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மகேந்திரன் நேற்று தனது கட்சியினருடன் வந்து கலெக்டர் வினீத்தை சந்தித்து கொடுத்த ஒரு மனுவில் கூறியிருப்பதாவது:-

உடுமலை கிருஷ்ணாபுரத்தில் இயங்கி வரும் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை ரூ.40 கோடி மதிப்பில் நவீன முறையில் மேம்படுத்தி, கரும்பு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொமரலிங்கம்-ருத்ராபாளையம் இடையே ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பில் அமராவதி ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க வேண்டும். தளிஞ்சி மலைவாழ் மக்களின் வசதிக்காக கூட்டாற்றின் குறுக்கே ரூ.1 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் அமைக்க வேண்டும்.

மடத்துக்குளத்தில் தாசில்தார் அலுவலகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் நீதிமன்றத்திற்கு இடம் தேர்வு செய்து புதிதாக நீதிமன்ற கட்டிடம் அமைக்க வேண்டும். திருமூர்த்தி அணையில் பொழுதுபோக்குடன் கூடிய பூங்கா அமைக்க வேண்டும். அமராவதி அணைப்பூங்காவை மறுசீரமைப்பு செய்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மடத்துக்குளத்தில் தக்காளி கூழ் தயாரிக்கும் ஆலையை அமைத்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும். ஜல்லிப்பட்டி அரசு மருத்துவமனையை 24 மணி நேரம் செயல்படும் மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.


Related Tags :
Next Story