தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை


தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 28 July 2023 12:30 AM IST (Updated: 28 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே தொப்பூர் செக்போஸ்ட் பகுதியை சேர்ந்த கலைச்செல்வன் மகன் தேவராஜ் (வயது 34). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந் தேதி தேவராஜ் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சுமார் 20 நாட்களுக்கு மேலாக சிகிச்சையில் இருந்த தேவராஜ் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story