கொங்கணாபுரம் அருகேபெண் தூக்குப்போட்டு தற்கொலை


கொங்கணாபுரம் அருகேபெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
சேலம்

எடப்பாடி

பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள சுந்தராபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம். விவசாயி. இவரது மகள் சவுமியா (வயது26). கொங்கணாபுரம் அருகே உள்ள கரையானூர் பகுதியைச் சேர்ந்தவர் அழகுசாமி. இவரது மகன் பச்சமுத்து. ஐ.டி. நிறுவன ஊழியர். இவர்கள் 2 பேரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு 4 வயதில் மகன் உள்ளான். பச்சமுத்து சென்னையில் தங்கி பணிபுரிந்து வருகிறார். மனைவி மற்றும் குழந்தை சொந்த ஊரில் இருந்தனர். இதனால் பச்சமுத்து 15 நாட்களுக்கு ஒரு முறை ஊருக்கு வந்து குடும்பத்தினருடன் இருந்துவிட்டு மீண்டும் சென்னைக்கு சென்று விடுவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பச்சமுத்து சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் கணவன்- மனைவிக்கு இடையே மன வருத்தம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சவுமியா வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சவுமியாவின் தந்தை மாணிக்கம் கொங்கணாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுமியா தற்கொலை செய்து கொண்டது குறித்து பச்சமுத்து மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story