சேலம் அருகேதொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலைபோலீசாருக்கு தெரியாமல் உடலை அடக்கம் செய்ய முயன்றதால் பரபரப்பு


சேலம் அருகேதொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலைபோலீசாருக்கு தெரியாமல் உடலை அடக்கம் செய்ய முயன்றதால் பரபரப்பு
x
சேலம்

சேலம்

சேலம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை போலீசாருக்கு தெரியாமல் அடக்கம் செய்ய உறவினர்கள் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கூலித்தொழிலாளி

சேலம் அருகே உள்ள சுக்கம்பட்டி காந்தி நகர் காலனியை சேர்ந்தவர் செல்லப்பன் (வயது 43), விவசாய கூலி தொழிலாளி. அவருடைய மனைவி ஜெயா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதனிடையே செல்லப்பனுக்கும், அதே பகுதியை சேர்ந்த கணவரை இழந்த பெண்ணுக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு மாலை அந்த பெண்ணின் வீட்டுக்கு செல்லப்பன் சென்றார். பின்னர் அவரிடம் செலவுக்காக பணம் கேட்டுள்ளார். இதற்கு அவர் கொடுக்க மறுத்துள்ளார்.

இதனால் அவரிடம் செல்லப்பன் தகராறு செய்தார். இதையடுத்து அந்த பெண் கோபத்தில் வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டார். இரவு 7.30 மணி அளவில் அந்த பெண் வீட்டுக்கு திரும்ப வந்தார்.

தற்கொலை

அப்போது வீட்டில் செல்லப்பன் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து செல்லப்பன் உடலை உறவினர்கள் கீழே இறக்கி அவரது வீட்டுக்கு கொண்டு சென்றனர். மேலும் அவரது உடலை போலீசாருக்கு தெரியாமல் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் வீராணம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இதையடுத்து அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story