ஆத்தூர் அருகேவேறு ஒருவருடன் செல்போனில் பேசியதை கணவர் கண்டித்ததால் பெண் தற்கொலை


ஆத்தூர் அருகேவேறு ஒருவருடன் செல்போனில் பேசியதை கணவர் கண்டித்ததால் பெண் தற்கொலை
x

ஆத்தூர் அருகே வேறு ஒருவருடன் செல்போனில் பேசியதை கணவர் கண்டித்ததால் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்

ஆத்தூர்

ஆத்தூர் அருகே உள்ள அப்பமசமுத்திரம், கிராமம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் துரைராஜ். இவருடைய மனைவி நித்யா (வயது 30). இவர்களுக்கு இவர்களுக்கு கவுதமதேவி (10) என்ற மகளும், கவுசிக் (8) என்ற மகனும் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் கட்டிட வேலைக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் நித்யா, நரசிங்கபுரத்தை சேர்ந்த ஒருவருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதை துரைராஜ் பலமுறை கண்டித்துள்ளார். கடந்த 8-ந் தேதி இரவு நித்யா செல்போனில் பேசியதை பார்த்த துரைராஜ் அவரை அடித்து உதைத்து கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த நித்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நள்ளிரவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், ஆத்தூர் புறநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து நித்யாவின் உடலை கைப்பற்றி ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து ஆத்தூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story