கெலமங்கலம் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


கெலமங்கலம் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x

கெலமங்கலம் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை:

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி கீழத்தெருவை சேர்ந்தவர் முத்துக்கருப்பன். இவருடைய மகன் முகேஷ் (வயது 21). இவர் கெலமங்கலம் அருகே பைரமங்கலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று அவர் தனது தாய்க்கு போன் செய்து பெண் ஒருவரை காதலித்து வருவதாகவும், அந்த பெண்ணை திருமணம் செய்து வைக்குமாறும் கூறியுள்ளார். அதற்கு அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த முகேஷ், தனியார் நிறுவனம் அருகே மரத்தில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story