சேந்தமங்கலம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


சேந்தமங்கலம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 31 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-02-01T15:31:30+05:30)
நாமக்கல்

சேந்தமங்கலம்:

புதுச்சத்திரம் அருகே உள்ள கதிராநல்லூரை சேர்ந்தவர் நடராஜன் (வயது 37). தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி (30). இந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் நடராஜன் தனது குடும்பத்தினருடன் சேந்தமங்கலம் அருகே துத்திகுளத்தில் உள்ள லட்சுமியின் பெற்றோர் வீட்டுக்கு வந்தார். அங்கு அவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த தற்கொலை குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story