கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை


கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 10 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-11T00:16:40+05:30)

கெலமங்கலம் அருகே கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை

கெலமங்கலம் அருகே கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கர்ப்பிணி தற்கொலை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள வேடம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சலா (வயது 27). கெலமங்கலம் அருகே உள்ள அக்கொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் 6 மாத கர்ப்பிணியாக இருந்த அஞ்சலாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அங்கு சிகிச்சை முடிந்த பின்னர் அவர் கணவர் வீட்டில் வசித்து வந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த அஞ்சலா சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

இதனால் அதிர்ச்சி அடைந்த கோவிந்தராஜ், மனைவி அஞ்சலா உடலை எடுத்து சென்று வேடம்பட்டியில் உள்ள மாமனார் வீட்டில் ஒப்படைத்தார். இதுகுறித்து கெலமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று அஞ்சலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கர்ப்பிணியான அஞ்சலா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணம் ஏதும் உண்டா? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட கர்ப்பிணியின் உடலை கணவர் மாமனார் வீட்டில் ஒப்படைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story