பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x

பெத்தநாயக்கன்பாளையம் அருகே பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்

பெத்தநாயக்கன்பாளையம்

பெத்தநாயக்கன்பாளையம் அருகே பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிளஸ்-2 மாணவர்

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே செக்கடிப்பட்டி அர்ஜுன தெருைவ சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய மகன் விஷ்வா (வயது 17). இ்ந்த மாணவரின் பெற்றோர் மும்பையில் வேலை செய்து வருவதால், தனது தாத்தாவான கிருஷ்ணன் என்பவருடன் மாணவர் விஷ்வா தங்கி, பேளூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

பெத்தநாயக்கன்பாளையம் ஆதிதிராவிடர் தெருவில் உள்ள தனது அத்தை மணி என்பவரின் வீட்டிலும் தங்கி அவ்வப்போது பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் செக்கடிப்பட்டியில் உள்ள தனது வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு செய்து கொண்டார்

இது குறித்து தகவல் கிடைத்ததும், ஏத்தாப்பூர் போலீசார் விரைந்து வந்து மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சோகம்

இதுவரை நடைபெற்ற பிளஸ்-2 தேர்வுகளை அந்த மாணவர் எழுதி உள்ள நிலையில், திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டதால், அவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? எனவும் ஏத்தாப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story