தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை
நல்லம்பள்ளி, கோட்டப்பட்டி பகுதிகளில் தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
நல்லம்பள்ளி
நல்லம்பள்ளி, கோட்டப்பட்டி பகுதிகளில் தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
தொழிலாளி
நல்லம்பள்ளி அருகே கோபாலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 23). கூலித்தொழிலாளி. இவர் பெங்களூருவில் தங்கி வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்த இவர் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்த் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஷம் குடித்து தற்கொலை
கோட்டப்பட்டி அருகே தென்பெண்ணை ஆற்றில் ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த கோட்டப்பட்டி போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது இறந்து கிடந்தவர் மல்லிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் (50) என்பதும், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
இதையடுத்து கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசன் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.