புஞ்சைபுளியம்பட்டி அருகே தாயை கொன்ற வழக்கில்ஜாமீனில் வந்த சிறுவன் தற்கொலை


புஞ்சைபுளியம்பட்டி அருகே தாயை கொன்ற வழக்கில்ஜாமீனில் வந்த சிறுவன் தற்கொலை
x

தாயை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்த சிறுவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டான்.

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி

தாயை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்த சிறுவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டான்.தாயை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்த சிறுவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டான்.

தாயை கொன்றான்

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள சுங்கக்காரன்பாளையத்தை சேர்ந்தவர் அருட்செல்வன். கட்டிட ஒப்பந்ததாரர். இவரது மனைவி யுவராணி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருந்தனர். இவர்களது 14 வயது மகன் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் இவர்களுடைய மகன் சரியாக படிக்கவில்லை என தெரிகிறது. இதனால் கடந்த ஆண்டு விடுதியில் தங்கி படிக்குமாறு அவனிடம் யுவராணி வற்புறுத்தி உள்ளார்.

இதனால் சிறுவன் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளான். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13-ந்தேதி அன்று இரவு யுவராணி தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது சிறுவன் யுவராணியின் தலையில் கல்லை போட்டு கொன்றுள்ளான்.

தற்ெகாலை

இதுதொடர்பாக புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்து பொள்ளாச்சியில் உள்ள சிறுவர் கூர் நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் ஜாமீனில் அந்த சிறுவன் வெளியே வந்தான். இதனிடையே அந்த சிறுவன் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டான். உடனே அவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தான்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த புஞ்சைபுளியம்பட்டி போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story