காவேரிப்பட்டணம் அருகேதீக்குளித்து பெண் தற்கொலை


காவேரிப்பட்டணம் அருகேதீக்குளித்து பெண் தற்கொலை
x
கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்:

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள நடுபையூரை சேர்ந்தவர் சுதன். இவருடைய மனைவி அமுதா (வயது 30). இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து கடந்த 9-ந் தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் மனமுடைந்த அமுதா உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் பலத்த தீக்காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அமுதா இறந்தார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story