அம்மாபேட்டை அருகே பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை; செல்போன் பயன்படுத்தியதை தாய் கண்டித்ததால் விபரீத முடிவு


அம்மாபேட்டை அருகே பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை; செல்போன் பயன்படுத்தியதை தாய் கண்டித்ததால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 8 Jun 2023 8:43 PM GMT (Updated: 9 Jun 2023 7:07 AM GMT)

அம்மாபேட்டை அருகே செல்போன் பயன்படுத்தியதை தாய் கண்டித்ததால் பள்ளிக்கூட மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு

அம்மாபேட்டை

அம்மாபேட்டை அருகே செல்போன் பயன்படுத்தியதை தாய் கண்டித்ததால் பள்ளிக்கூட மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மாணவி

அம்மாபேட்டை அருகே உள்ள சிங்கம்பேட்டை சின்னக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் சித்தையன். இவருடைய மனைவி கலாமணி. இந்த தம்பதிக்கு கீர்த்தனா (வயது 14) என்ற மகளும், மணிகண்டன் (12) என்ற மகனும் உள்ளனர். சித்தையனும், கலாமணியும் கூலி வேலை செய்து வருகின்றனர்.

கீர்த்தனா சிங்கம்பேட்டையில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு தேர்வு எழுதி முடித்துவிட்டு இந்த கல்வி ஆண்டு முதல் 10-ம் வகுப்புக்கு செல்ல இருந்தார்.

விஷம் குடித்தார்

கோடை விடுமுறை என்பதால் கீர்த்தனா வீட்டில் இருந்து அடிக்கடி செல்போனை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனை கலாமணி கண்டித்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர் செல்போனை கீழே போட்டு உடைத்து விட்டார். பின்னர் தனது தாயிடம் புதிய செல்போன் வாங்கி தர வேண்டும் என்று கூறி தொந்தரவு செய்துள்ளார்.

இதில் கோபமடைந்து கீர்த்தனாவை தாய் திட்டியுள்ளார். இதனால் கீர்த்தனா மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர் கடந்த 5-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.

சாவு

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கீர்த்தனா நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story