கிணற்றில் குதித்து பெண் தற்கொலை


கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 20 Jun 2023 1:00 AM IST (Updated: 20 Jun 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி அருகே உள்ள கிட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி மல்லிகா (வயது 55). மல்லிகாவின் கணவர் ராஜா சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் மல்லிகா தனது தங்கையின் கணவரோடு பெங்களூருவில் வசித்து வந்தார். கடந்த 17-ந் தேதி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக் கொண்டு ஊருக்கு வந்த மல்லிகா அங்குள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story