பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றவரால் பரபரப்பு


பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றவரால் பரபரப்பு
x
தினத்தந்தி 13 Jun 2023 12:15 AM IST (Updated: 13 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.

தற்கொலை முயற்சி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதுசந்தை மேற்கு பகுதியை சேர்ந்த ஆயிரராமன் மகன் சுரேஷ்குமார் (வயது 43). இவர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வந்தார். மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் வளாக பகுதியில் வந்த அவர் திடீரென்று தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை கையில் எடுத்து உடலில் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியில் இருந்த போலீசார் உடனடியாக அவரை தடுத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கூறியதாவது:-

திருப்பாலைக்கு அருகே உள்ள மோர்ப்பண்ணையை சேர்ந்த சத்தியராஜ் அதேபகுதியை சேர்ந்த ஆனந்ததமிழ் என்பவரின் 711 கிராம் நகை வங்கியில் அடகு உள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த நகையை மீட்டு மறு அடகு வைத்து கொள்ள பணம் தந்தால் அதற்கு அதிக லாபம் பெற்றுத்தருவதாக கூறி உள்ளார். இதனை நம்பிய சுரேஷ்குமார் தனது பணம் மற்றும் தனக்கு தெரிந்தவர்களிடம் வாங்கிய பணம் என மொத்தம் ரூ.21 லட்சம் கொடுத்துள்ளார்.

பரபரப்பு

பணத்தினை வாங்கி கொண்ட சத்தியராஜ் திருப்பி தராமல் ஏமாற்றி வருகிறார். பணம் குறித்து கேட்டால் அவரின் தாய் தி.மு.க. கவுன்சிலர் எனக்கூறி கொலை மிரட்டல் விடுவதோடு, அடியாட்களை வைத்து மிரட்டுகிறார். இதுகுறித்து காரைக்குடி போலீஸ் நிலையம், ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் நிலையம், கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்தும் பயனில்லை. எனவே, தனது உயிரை மாய்த்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்றார்.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுரேஷ்குமார் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தற்கொலை முயற்சி சம்பவம் தொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.


Next Story