வறண்டு காணப்படும் சுக்கிரவார்பட்டி நீர்த்தேக்கம்


வறண்டு காணப்படும் சுக்கிரவார்பட்டி நீர்த்தேக்கம்
x

விருதுநகருக்கு கோடைக்காலத்தில் கைக்கொடுக்கும் சுக்கிரவார்பட்டி நீர்த்தேக்கம் வறண்டு காணப்படுகிறது. அதை சுற்றி உள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

விருதுநகர்

விருதுநகருக்கு கோடைக்காலத்தில் கைக்கொடுக்கும் சுக்கிரவார்பட்டி நீர்த்தேக்கம் வறண்டு காணப்படுகிறது. அதை சுற்றி உள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

குடிநீர் ஆதாரங்கள்

விருதுநகருக்கு தாமிரபரணி கூட்டுக்குடி நீர்த்திட்டம் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு குடிநீர் ஆதாரங்களாக பயன்பட்டு வந்தது ஆனைக்குட்டம் அணைப்பகுதி, ஒண்டிப்புலி கல்குவாரி, காருசேரி கல்குவாரி மற்றும் சுக்கிரவார்பட்டி கோடைகால குடிநீர் தேக்கம் ஆகியவைதான். இதில் தற்போதைய நிலையில் ஆனைக்குட்டம் அணைப்பகுதியில் உறைகிணறுகள் தோண்டப்பட்டு குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது.

ஆனாலும் அணையில் நீரை தேக்கி வைக்க முடியாத நிலையில் உறை கிணறுகளில் இருந்தும் எதிர்பார்க்கும் அளவிற்கு குடிநீர் கிடைக்காத நிலை நீடிக்கிறது. ஒண்டிப்புலி குவாரியில் இருந்து குடிநீர் வினியோகத்திற்கு கொண்டுவரும் நடவடிக்கை முழுமையாக முடிவடையாத நிலையில் உள்ளது.

வறண்டு கிடக்கிறது

சுக்கிரவார்பட்டி கோடைகால குடிநீர் தேக்கத்தை பொருத்தமட்டில் இந்த நீர்த்தேக்கத்தில் மழைக்காலங்களில் நீரை தேக்கி வைத்து கடும் கோடையில் விருதுநகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் போது கை கொடுக்கும் நிலை கடந்த காலங்களில் இருந்து வந்தது. ஆனால் தற்போது கோடைகால குடிநீர் தேக்கம் முற்றிலுமாக வறண்டு கிடக்கிறது. அதிலும் நீரைத் தேக்கி வைக்கும் பகுதிகளில் கருவேலமரங்கள் அடர்ந்து கிடக்கும் நிலை உள்ளது.

விருதுநகர் நகராட்சி நிர்வாகம் 120 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட இந்த கோடைகால குடிநீர் தேக்கத்தில் கருவேலமரங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீரை தேக்கி வைக்க நடவடிக்கை ஏதும் எடுக்காத நிலையில் பாராமுகமாகவே உள்ளது இதனால் சமீபகாலமாக கோடைகால குடிநீர்தேக்கம் பயன்பாட்டில் இல்லை.

கோரிக்கை

எனவே சுக்கிரவார்பட்டி கோடைகால குடிநீர் தேக்கத்தில் கருவேல மர ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைக்காலங்களில் நீரைத் தேக்கி வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் பல்வேறு துறைகளில் உள்ள பொக்லைன் எந்திரங்கள் மூலம் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகத்திற்கு உதவ வேண்டியது அவசியமாகும்.


Related Tags :
Next Story