சுல்தான்பேட்டை போலீஸ் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்


சுல்தான்பேட்டை போலீஸ் நிலையத்தில்  விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்
x

சுல்தான்பேட்டை போலீஸ் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் நடந்தது.

கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை

தமிழகத்தில் வருகிற 31-ந்தேதி (புதன்கிழமை) இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் இந்து முன்னணி, விஷ்வ இந்து பரிஷத், பொதுமக்கள் ஆகியோர் சார்பில் ஒன்றியத்தில் 31 இடங்களில் ஆங்காங்கே பல்வேறு விதமான வண்ணங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு, பின்னர் வாய்க்காலில் விசர்ஜனம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா சிலைகள் வைப்பது தொடர்பாக இந்து முன்னணி அமைப்பினருடன் நேற்று சுல்தான்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஆலோசனைக்கூட்டம் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் நடந்தது. அப்போது, சிலைகள் வைக்கப்படும் இடங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முறைகள், சிலைகள் வைக்கும் அமைப்பினர் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து சப் -இன்ஸ்பெக்டர் விளக்கி கூறினார். கூட்டத்தில், கோவை மாவட்ட இந்து முன்னணி பொதுக்குழு உறுப்பினர் புருஷோத்தமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story